சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை, பெங்களூருவைச் சேர்ந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர் நேரடியாகத் தனது அன்றாட வாழ்வில் பயன்படுத்தி எப்படித் தன் வாழ்க்கையை மாற்றியமைத்தார் என்பதை விளக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த ஓட்டுநர் தனக்கு ஏற்படும் கடினமான சந்தேகங்களை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து, அதை சாட்ஜிபிடி மூலம் தனது தாய்மொழியான கன்னடத்திலேயே மிகவும் எளிமையான முறையில் கேட்டுப் புரிந்து கொள்வதுடன், அதன் ‘குரல் அம்சத்தை’ பயன்படுத்தி நேரடியாகப் பேசி புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டு அசத்தி வருகிறார்.

சாட்ஜிபிடியின் முந்தைய உரையாடல் சூழலை நினைவில் வைத்துப் பதிலளிக்கும் திறனைப் பாராட்டிய அதே வேளையில், ஜோதிடம் மற்றும் ராசி பலன்கள் போன்ற சிக்கலான தலைப்புகளில் அது அளித்த பதில்கள் முழுமையற்றதாக இருந்ததாகக் கூறி அதன் குறைபாட்டையும் அந்த விழிப்புள்ள ஓட்டுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, சாட்ஜிபிடியைத் தயாரிக்கும் சாம் ஆல்ட்மேனின் ‘ஓபன்ஏஐ’ நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த ஓட்டுநரின் திறமையைப் பாராட்டி கன்னட மொழியிலேயே நேரடியாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Gagan Saiprasad (@gagan.saiprasad)

“>

மேலும் ஒரு ஸ்மார்ட்போனும் கற்கும் ஆர்வமும் இருந்தால் தொழில்நுட்பம் எப்படி ஒரு சாதாரண மனிதனின் விதியை மாற்றும் என்பதற்கு இந்த பெங்களூரு ரிக்‌ஷா ஓட்டுநரின் கதை ஒரு வாழும் உதாரணமாகத் திகழ்கிறது.