மகாராஷ்டிராவில் பெண்கள் தங்கள் கணவர்களின் நீண்ட ஆயுளுக்காகவும், ஏழு பிறவிகளிலும் ஒரே கணவர் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் விரதமிருந்து ஆலமரத்தைச் சுற்றி வெள்ளை நூல் கட்டி ஏழு முறை வலம் வந்து வழிபடும் பாரம்பரிய பண்டிகை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், படித்த, வேலையில்லாத இளைஞர் ஒருவர் இந்த பாரம்பரியத்திற்கு ஒரு நகைச்சுவையான மற்றும் விசித்திரமான திருப்பத்தை அளித்துள்ளார்.

திருமணம் சாத்தியமில்லாததால் விரக்தியடைந்த அந்த இளைஞன், ஆலமரத்தின் மீது ஒரு குச்சியை எறிந்து, “பெண்களுக்கு ஏழு பிறவிகளுக்கும் ஒரே கணவர்தான் கிடைக்கிறார், ஆனால் 40-45 வயதான எங்களுக்கும் திருமணம் ஆவதில்லை, நிர்வாணக் காளைகள் போலச் சுற்றித் திரியும் எங்களுக்கு முதல் திருமணம் எப்போது யாருடையதாக இருக்கும்?” என்ற கடினமான கேள்வியைக் கேட்டு நேரடியாகவே ஆலமரத்திடம் முறையிட்டுள்ளார்.

மேலும், “அரசாங்கம் எங்களைக் கண்டுகொள்ளவில்லை, எனவே கைகூப்பி எங்களைக் கண்டுகொள்ளுங்கள் என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்” என அந்த இளைஞன் ஆலமரத்திடம் விடுத்த இந்த வினோதமான வேண்டுகோள் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதப் பொருளாக மாறியுள்ளளது.

 

View this post on Instagram

 

A post shared by NDTV Marathi (@ndtvmarathi)

“>

மேலும் சிலர் அவரது வேலையில்லா திண்டாட்டம் மற்றும் திருமண விரக்தி குறித்த உணர்வுகளைப் புரிந்து கொண்டாலும், பலர் வேடிக்கையான மீம்களையும் நகைச்சுவையான எதிர்வினைகளையும் உருவாக்கி இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.