மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான உறவு என்பது வெறும் உணவு மற்றும் வேலையோடு முடிந்துவிடுவதில்லை. அது ஒரு ஆழமான ஆன்மீகப் பிணைப்பு என்பதை இந்த வீடியோ மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

வைரலாகி வரும் இந்த வீடியோவில், வயதான விவசாயி ஒருவர் தனது காளையை ‘சாட்சாத் நந்தி’யாகக் கருதி, அதன் கால்களில் விழுந்து மிகவும் பணிவுடன் வணங்குகிறார்.

பொதுவாக விலங்குகள் விலகிச் செல்லும், ஆனால் இங்கே அந்த காளை அசையாமல் நின்று, விவசாயி கால்களைத் தொட்டு வணங்கியவுடன், தனது தலையை அவர் மீது சாய்த்து அன்பைப் பொழிகிறது.

இந்தக் காட்சியைக் கண்ட நெட்டிசன்கள், “அந்தக் காளையின் கண்களில் தெரியும் கருணையும், அது ஆசி வழங்குவது போன்ற பாவனையும் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது; இது வெறும் பாசமல்ல, உண்மையான பக்தி” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.