மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஆழமான பிணைப்பை விளக்கும் வகையில் ஒரு வீடியோ வெளியாகி நெட்டிசன்களின் இதயங்களை வென்றுள்ளது.

ட்விட்டரில் (X) பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், ஒரு சிறுவன் கையில் துப்பாக்கி போன்ற ஒரு பிச்சகாரி (Water Gun) வைத்துள்ளான். விளையாட்டுத் தனமாக அந்தச் சிறுவன் யானையை நோக்கி ‘சுடுவது’ போல பாவனை செய்கிறான்.

சிறுவன் ட்ரிக்கரை அழுத்திய அடுத்த நொடி, அந்தத் துப்பாக்கியிலிருந்து தண்ணீர் வந்ததும், குட்டி யானை நிஜமாகவே சுடப்பட்டது போல அப்படியே தள்ளாடி தரையில் விழுகிறது.

சிறுவன் பயந்துபோய் துப்பாக்கியைப் போட்டுவிட்டு ஓடிவந்து யானையைக் கட்டியணைக்க, குட்டி யானை உடனே எழுந்து மீண்டும் விளையாடத் தொடங்குகிறது. யானையின் இந்த ‘ஆஸ்கார்’ லெவல் ஆக்டிங்கை பார்த்த நெட்டிசன்கள், “நிஜமான அன்பு இதுதான்” என நெகிழ்ச்சியுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.