தமிழக அரசியல் களத்தில் புயலை கிளப்பிக் கொண்டிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (TVK) தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இதைக் கொண்டாடி வரும் ரசிகர்களுக்கு மகுடம் சூட்டும் வகையில் தலைவர் விஜய் ஒரு நெகிழ்ச்சியான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
தனது கட்சிக்கு ‘விசில்’ சின்னம் கிடைத்தது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள விஜய், “விசில் என்பது வெறும் ஒலி எழுப்பும் கருவி மட்டுமல்ல; அது ஒரு நேர்மறையான நிகழ்வின் குறியீடு (Symbol of Positive Event)” என்று குறிப்பிட்டுள்ளார்.
என் நெஞ்சில் குடியிருக்கும்
அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது.
இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றிக்… pic.twitter.com/A6LRDnC2ru
— TVK Vijay (@TVKVijayHQ) January 22, 2026
ஒரு தொடக்கத்திற்கு, ஒரு வெற்றிக் கொண்டாட்டத்திற்கு, ஆபத்தில் இருப்பவரை அழைக்க என விசில் எப்படி நன்மைகளின் அடையாளமாக இருக்கிறதோ, அதேபோல தனது கட்சியின் அரசியலும் நேர்மறையானதாக இருக்கும் என்பதை அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
“நமது சின்னம், நமது அடையாளம்; இனி தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நேர்மறை மாற்றத்திற்கான விசில் சத்தம் ஒலிக்கட்டும்” என அவர் தொண்டர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளார்.
