
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு என்ன பிரச்சனைன்னு பாருங்க முதல்ல….. எங்க ஐயா சௌந்தர்ராஜன் சொல்றாரு இல்ல, ஒரு சாதாரண பஞ்சபடி கூட கிடையாது. ஏற்கனவே இந்த போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினை பார்த்திருப்பீங்க…. பல போராட்டங்கள், 7000 கோடி அவங்களுக்கு கொடுக்கக்கூடிய நிலுவைத் தொகை…. பிடித்த பணம்…. அவங்க உழைப்பு…. அவுங்க காசு…. எங்க அந்த காசு ? தரல நீங்க…. கடைசியா வீதியில அவங்க போராடி தோத்தே போயிட்டாங்க. நான் ஒரு போக்குவரத்து தொழிலாளர். ஓய்வு பெறும்போது….. ஏழு லட்சம் ரூபாய் எனக்கு பணம் வரும்.
அதனால் அதை வச்சு என் பொண்னை கட்டி குடுக்கணும்னு, நான் நினைச்சேன். நான் 7 லட்சம் ரூபாய் வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டினேன். அந்த பணம் வரும்போது நான் மொத்தமா கடனை கட்டிட்டு, நிம்மதியா சொந்த வீட்டில சாகலாம்னு நினைச்சேன். ஆனால் அந்த பணம் எனக்கு வரலையே…. யாரைப் பத்தி கவலைப்பட்டு இருக்கீங்க? அதனால அவங்க போராட்டம், அவங்களுக்கு நெருக்கடி வரும்போது போராடனும்.
இந்த நேரத்துல போராடினால் தான் அரசு கவனத்தில் எடுக்கும். எண்ணுரில் அம்மோனியா நச்சு காற்று வெளியானதுக்கு போராடினார்கள். 10ஆவது நாள் வந்து மாவட்ட ஆட்சியர் பார்க்கிறாங்க. அதுவரைக்கும் என்ன பண்ணிங்க ? வேற ஏதாவது வேலை இருந்ததா ? இனிமே கசியாமல் பார்த்துக்கொள்வோம்ன்னு சொல்லுறாங்க.
அப்போ கசிஞ்சதுக்கு என்ன முடிவு ? முதல் நாள் மக்கள் போராடும் போது இந்த ஆபத்து வரும்போது உடனே வந்து பார்த்து, அவங்களுக்கு ஆறுதலா வார்த்தை சொல்லி, அதை சரி பண்ணனும்னு சொல்ல முடியல. 10 நாள் வரைக்கும் என்ன பண்றீங்க ? அப்போ அந்த பிரச்சனைன்னு வரும்போது….. அந்த நெருக்கடி வரும்போது….. பொங்கல் நேரத்துல போக்குவரத்து தொழிலாளர்கள் போராடினால் தான் கவனத்தை ஈர்க்க முடியுது. அப்போதான் நீ கவனிக்குற… இல்லனா எங்க கவனிப்ப ? என கேள்வி எழுப்பினார்.