நடிகர் விஜய் தொடங்க இருக்கும் அரசியல் கட்சியின் பெயர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தனது மக்கள் இயக்கத்தை கட்சியாக தொடங்குவதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கட்சிக்கு ‘தமிழக முன்னேற்றக் கழகம்’ என பெயர் வைக்க விஜய் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. விரைவில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.