தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் எஸ்.ஜே சூர்யா. குஷி மற்றும் வாலி போன்ற வெற்றி படங்களை இயக்கிய எஸ்.ஜே சூர்யா தற்போது படங்களில் நடித்து வருகிறார். ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்து விதமான வேடங்களிலும் கலக்கி வரும் எஸ்.ஜே சூர்யாவுக்கு தற்போது 54 வயது ஆகிறது.

இவர் நடித்துள்ள பொம்மை திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் நடிகர் எஸ்.ஜே சூர்யா திருமணம் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதாவது தான் சினிமா மற்றும் படங்களை மட்டுமே நேசிப்பதாக எஸ்.ஜே சூர்யா கூறியுள்ளார். மேலும் தற்போதைக்கு தான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லையும் என்பதையும் எஸ்.ஜே சூர்யா மழுப்பலாக கூறியுள்ளார்.