சமூக ஊடகங்கள் எப்போதுமே விசித்திரமான மற்றும் வேடிக்கையான வீடியோக்களால் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. அந்த வகையில், தற்போது எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் ஒரு சிறுவனின் வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பொதுவாகக் குழந்தைகள் பள்ளிக்கு நடந்து செல்வதையோ, மிதிவண்டி அல்லது பள்ளி வாகனங்களில் செல்வதையோ நாம் பார்த்திருப்போம். ஆனால், இந்த வீடியோவில் உள்ள ஒரு சிறுவன், தனது முதுகில் பள்ளிப் பையை மாட்டிக்கொண்டு, கையில் ஒரு சிறிய குச்சியோடு ஆட்டின் மீது ஜாலியாக அமர்ந்து சவாரி செய்தபடி பள்ளிக்குச் செல்கிறான்.
இந்த வினோதமான சவாரிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் பலரையும் ரசிக்க வைத்துள்ளது. @VishalMalvi_ என்ற எக்ஸ் கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோ, குறுகிய காலத்திலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.
Bro goes to school sitting on Messi in Northeast India 🗿 pic.twitter.com/Vzs43rHiiI
— Vishal (@VishalMalvi_) June 4, 2026
“>
“>
இதைப் பார்த்த இணையவாசிகள் பலரும் தங்களது கருத்துக்களை வேடிக்கையாகப் பதிவு செய்து வருகின்றனர். சிலர் “ஆட்டிற்கும் அந்தச் சிறுவனுக்கும் இடையே உள்ள நட்பு மிகவும் அழகாக இருக்கிறது” என்றும், வேறு சிலர் “இவன்தான் நிஜமான ‘கோட்’ சவாரி செய்கிறான்” என்றும் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இந்த வீடியோ நெட்டிசன்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்காக மாறியுள்ளது.
