சோசியல் மீடியாவில் வைரலாக வேண்டும் என்ற ஆசையில் இளைஞர்கள் செய்யும் ஆபத்தான ஸ்டண்டுகள் சில நேரங்களில் பெரிய விபத்தில் முடிந்துவிடுகின்றன.
அதுபோன்ற ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ தற்பொழுது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு வீட்டின் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருக்கும் நபர் ஒருவர், தனது வாயில் பெட்ரோலை நிரப்பிக்கொண்டு எரியும் கட்டையின் மீது பலமாக ஊதுகிறார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பெட்ரோல் துளிகள் அவரது முகத்தில் சிதறியதால், தீ அசுர வேகத்தில் அவரது முகம் முழுவதும் பரவுகிறது. இதனால் அங்கிருந்தவர்கள் பதறியடித்துக்கொண்டு அவரை நோக்கி ஓடுகின்றனர்.
அதே நேரத்தில் கீழே சிந்திய பெட்ரோலிலும் தீப்பிடித்ததால் அந்த இடமே போர்க்களமாக மாறுகிறது.
இந்த விபத்தின் போது தீயை அணைக்க முயன்ற அங்கிருந்த நபர் ஒருவர், அவசரத்தில் தண்ணீருக்குப் பதிலாக அருகில் இருந்த மற்றொரு எரிபொருளை எடுத்து தீயின் மீது ஊற்றியதால் இன்னும் அதிகமாகப் பரவி நிலைமை மோசமானது.
Peak Male content 💀 pic.twitter.com/3XTv2WdP5X
— Luna Vantour (@Luna_vantour) June 3, 2026
“>
பெரும் போராட்டத்திற்குப் பிறகே அங்கிருந்தவர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், லைக்குகளுக்காகவும் வியூஸ்களுக்காகவும் இப்படி உயிரை பணயம் வைத்து ஆபத்தான விளையாட்டுகளில் ஈடுபடக் கூடாது என்று தங்களது கண்டனங்களையும் அதிர்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர்.
