பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்த ‘மான் வேட்டை’ (Blackbuck Case) விவகாரத்தை மையமாகக் கொண்டு, “காலா ஹிரன்” (Kaala Hiran) என்ற திரைப்படத்தை தயாரிப்பாளர் அமித் ஜானி எடுத்து வருகிறார். இந்த நிலையில், சல்மான் கானின் ரசிகர்கள் தனக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாகத் தயாரிப்பாளர் அமித் ஜானி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்தத் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சல்மான் கான் தரப்பில் இருந்து அனுப்பப்பட்ட அதிகாரப்பூர்வ சட்ட நோட்டீஸை (Legal Notice), அவர் லைவ் கேமரா முன்பாகவே ஆவேசமாகக் கிழித்து எறிந்து பாலிவுட்டையே அதிர வைத்துள்ளார்.
இதுகுறித்துத் தீவிரமாகப் பேசியுள்ள தயாரிப்பாளர் அமித் ஜானி, இதுபோன்ற எந்தவொரு மிரட்டல்களுக்கும் தான் ஒருபோதும் பயப்படப் போவதில்லை என்றும், எக்காரணம் கொண்டும் தனது திரைப்படத்தின் கதையையோ அல்லது ‘காலா ஹிரன்’ என்ற தலைப்பையோ மாற்றப் போவதில்லை என்றும் சல்மான் கானுக்கு நேருக்கு நேர் அதிரடி சவால் விடுத்துள்ளார். சல்மான் கானின் லீகல் நோட்டீஸை தயாரிப்பாளர் கேமரா முன்பே துணிச்சலாகக் கிழித்தெறிந்த இந்த வீடியோ, தற்போது சினிமா வட்டாரங்களைத் தாண்டி ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களிலும் தற்போதைய மிக முக்கிய ஹாட் டாபிக்காக மாறி காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
