சென்னையில் எண்ணூர் கடற்கரை சாலையில் பயங்கர விபத்து: ஸ்கூட்டி எடுத்த திடீர் யூ-டர்ன், பின்னால் வந்த பைக் மோதி வானில் தூக்கி வீசப்பட்டு புரண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, ஆகஸ்ட் 18, 2025 அன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

வீடியோவில், ஸ்கூட்டி ஓட்டுநர் திடீரென யூ-டர்ன் எடுக்க முயன்றபோது, பின்னால் அதிவேகத்தில் வந்த பைக் மோதியது தெளிவாகத் தெரிகிறது. மோதிய வேகத்தில் பைக் வானில் தூக்கி வீசப்பட்டு இரண்டு முறை புரண்டு, ஓட்டுநருடன் சாலையில் விழுந்தது, அதேநேரம் ஸ்கூட்டி ஓட்டுநர் சில மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டார்.

இந்த விபத்தில் இரு வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விபத்துக்குப் பிறகு, ஸ்கூட்டி ஓட்டுநர் எழுந்து தனது வாகனத்தை நோக்கி சென்றாலும், பைக் ஓட்டுநர் அசையவில்லை.

அப்போது அந்த சாலையில் பயணித்த மற்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இந்த விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்ததாக வீடியோவில் தெரிகிறது, ஆனால் பைக் ஓட்டுநர் உயிர் பிழைத்தாரா? என்பது தெளிவாகவில்லை. இணையவாசிகள் இரு ஓட்டுநர்களின் பொறுப்பற்ற செயலையும் குற்றம் சாட்டி வருகின்றனர்.