உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினந்தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. பொதுவாகவே வாட்ஸ் அப் செயலியில் எமோஜி மற்றும் ஸ்டிக்கர்கள் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. சமீபத்தில் கேலரியில் இருக்கும் புகைப்படங்களை ஸ்டிக்கர்கலாக அனுப்பும் புதிய வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்தது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் எமோஜி மற்றும் ஸ்டிக்கர்கள் தொடர்பான புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி whatsapp செய்தியில் சாதாரணமாக ஹார்ட் உள்ளிட்ட சில எமோஜிகள் மட்டுமே பெரிய அளவில் அனுப்ப முடியும். தற்போது ஸ்டிக்கர் களையும் பெரிய அளவில் அனுப்பும்படியான புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. அதாவது லேப்டாப் மற்றும் கணினி வழியில் வாட்ஸ் அப் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. பெரிய அளவிலான ஸ்டிக்கர்களை அனுப்பவும் இந்த புதிய அப்டேட் சில மெட்டா டெஸ்டா பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால் கூடிய விரைவில் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.