YouTube வாயிலாக யார் வேண்டுமானாலும் வருமானம் ஈட்ட முடியும். அதேசமயம் உங்களின் வீடியோக்கள் தரமானதாக இருந்தால் மட்டுமே எதிர்பார்க்கும் வருவாயை ஈட்ட இயலும். அதற்கென YouTube நிறுவனம் சில வழிமுறைகளை விதித்துள்ளது. அந்த விதிமுறைகள் சற்று சவாலாகவே இருந்த சூழ்நிலையில், அதனையும் தற்போது YouTube நிறுவனம்  தளர்த்தியுள்ளது.

யூடியூப் நிறுவனத்தின் பழைய விதிமுறை படி, உங்கள் சேனல் மானிடைசேஷன் செய்வதற்கு குறைந்தபட்சமாக 1000 சப்ஸ்கிரைபர்கள், ஒரு வருடத்தில் நீங்கள் பதிவிடும் வீடியோக்களை 4,000 மணிநேரம் பார்வையாளர்கள் பார்த்திருக்க வேண்டும் (அ) 90 நாட்களுக்கு யூடியூப் ஷார்ட்ஸ்களின் வியூஸ் 10 மில்லியனை எட்டியிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் யூடியூப் நிறுவனத்தின் புது மானிடைசேஷன் ரூல்ஸ் மற்றும் பாலிசிகளின் படி உங்கள் சேனல் வெறும் 500 சப்ஸ்கிரைபர்களை கொண்டிருந்தாலே போதும். அதோடு 90 தினங்களில் 3 வீடியோக்களை பதிவிட்டிருக்க வேண்டும். இவ்வீடியோக்களை 3000 மணி நேரம் பார்வையாளர்கள் பார்த்திருத்தல் வேண்டும்.

அதோடு YouTube ஷார்ட்ஸ்களின் வியூஸ் 3 மில்லியனை எட்டியிருக்க வேண்டும். இந்த அளவீடுகள் இருந்தால் போதும் உங்கள் சேனலை மானிடைசேஷன் செய்துக்கொள்ளலாம். முதலில் அமெரிக்கா, தைவான், கனடா, தென் கொரியாவில் நடைமுறைபடுத்தப்படும் இந்த விதிமுறை, விரைவில் மற்ற நாடுகளிலும் விரிவுப்படுத்தப்பட இருக்கிறது.