உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களுடன் வெற்றிகரமாக இயங்கி வரும் மெசேஜிங் செயலி தான் வாட்ஸ்அப். இதனிடையே மெட்டா நிறுவனம் தொடர்ந்து புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. பயனர்களின் சாட்டிங் அனுபவத்தை மேம்படுத்துவதற்காகவே இதுபோன்ற புது அம்சங்களை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி, மீண்டும் புது அம்சம் ஒன்றை வாட்ஸ்அப்-ல் அறிமுகம் செய்திருக்கிறது. அதாவது ஸ்க்ரீன் ஷேரிங் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதுவரையில் வீடியோ கான்பிரன்சிங் செய்வதற்காக நாம் ஸ்கைப், கூகுள் மீட், ஜூம் மீட் ஆகிய வீடியோ காலிங் ஆப்ஸ்களை தான் பயன்படுத்தி வந்தோம். இனி வாட்ஸ்அப் செயலிலும் நம்மால் வீடியோ கான்பிரன்சிங் செய்ய இயலும். மெட்டா அறிமுகம் செய்யவுள்ள ஸ்க்ரீன் ஷேரிங் அம்சம் ஒரே நேரத்தில் பலர் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக இணைக்கப்பட்டிருக்கும்போது, அதை ஹோஸ்ட்  செய்யும் நபரோ (அ) வேறு யாரோ தங்களது மொபைல் ஸ்கிரீன் (அ) லேப்டாப் ஸ்கிரீனை அனைவருக்கும் தெரியும்படி ஷேர் செய்துகொள்ள இயலும். கூடிய விரைவில் இந்த ஷேரிங் வசதியை WhatsApp-ல் அறிமுகம் செய்ய இருக்கிறது.