பழைய போன்களை ஆன்லைன் மூலம் விற்க சந்தையில் பல்வேறு தளங்கள் இருந்தாலும் கூட பலரும் பயன்படுத்துவது பிளிப்கார்டு தான். இது எக்ஸ்சேஞ்ச் கிடையாது விற்பனையாகும். பிளிப்கார்டில் பழையபோன்கள் விற்பனையை அந்த ஆப் வாயிலாகவே செய்யும் வசதியானது இருக்கிறது. இந்த நிறுவனம் Apple, Samsung, Realme, Motorola, Oppo மற்றும் Vivo ஆகிய அனைத்து பிராண்டுகளையும் ஏற்றுக் கொள்கிறது. இங்கே பழையப்போனை விற்பனை செய்தால் வீட்டுக்கு அவர்களே வந்து பிக்அப் செய்துகொள்கிறார்கள். பணமும் உடனே கிடைத்துவிடுவது.

எனினும் தற்போது இந்த வசதி இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இல்லை. ஆகவே இதை செக் செய்ய உங்கள் பின்கோடை உள்ளிட்டு சரிபார்க்கவும். பிளிப்கார்டில் பழையப்போனை விற்பனை செய்ய முதலாவதாக appஐ ஓபன் செய்யவும். அதன்பின் நீங்கள் கேட்டரிக்கு சென்று Phonecash எனும் விருப்பத்தைத் தேடவும். அதை தட்டினால் உங்களது போனை விற்கும் ஆப்ஷன் கிடைக்கும். பிறகு இங்கே உங்களது செல்போன் பிராண்ட் பெயரை டைப் செய்து தேடவும். நீங்கள் விரும்பினால் பிராண்டின் லோகோவை தேர்ந்தெடுத்து அதில் இருந்து சாதனத்தை பார்க்கலாம்.

அதனை தொடர்ந்து உங்களது  தொலைபேசியின் மாடலை நீங்கள் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தேர்வு செய்த பிறகு திரையில் தொலைபேசியின் மதிப்பிடப்பட்ட மதிப்பை காண்பீர்கள். எனினும் போனின் உண்மையான விலையை தெரிந்துக்கொள்ள வேண்டுமெனில் சில கேள்விகளுக்கு பதில் கூறவேண்டும். இந்த செயல்முறையை முடித்தபின், நீங்கள் பிக்-அப் விருப்பத்தை தொடரலாம் மற்றும் தொலைபேசியை விற்கலாம்.