உங்கள் கணக்கின் மீது கூகுள் அதிகமான கட்டுப்பாட்டை வழங்குகிறது மற்றும் தொலை நிலையில் மாற்றங்களை செய்ய உங்களை அனுமதிக்கிறது. அனைவரும் தங்கள் கூகுள் கணக்கை பயன்படுத்துபவர்களை பார்க்க இயலும். உங்களது கூகுள் கணக்கில் உள்நுழைந்திருக்கும் கணினிகள், தொலைபேசிகள் மற்றும் பிற சாதனங்களை சரிபார்க்க நிறுவனம் அனுமதிக்கிறது. உங்களது கணக்கில் வேறு யாரும் உள்நுழையவில்லை என்பதை உறுதிப்படுத்த, google.com/devices எனும் தளத்தில் பார்க்கலாம்.

உங்களின் ஆண்ட்ராய்டு மொபைலின் Settings பகுதிக்கு சென்று “Google” விருப்பத்தை தேர்வு செய்து, அதன் கீழே போக வேண்டும். தற்போது “Manage Your Google Account” என்பதனை தேர்வு செய்யவும். நீங்கள் “Security” பகுதியை அடையும் வரையில் திரையில் இடதுபுறமாக ஸ்லைடு செய்ய வேண்டும். பிரிவுகளின் பெயர்களானது திரையின் மேல் தெரியும். அதன் கீழ் சென்று “Your Devices”-ஐ தட்டவும். பின் Manage All Devices என்பதை மீண்டும் தட்டவேண்டும். இப்போது உங்களது கூகுள் கணக்கில் அனைத்து சாதனங்களும் உள்நுழைந்திருப்பதை நீங்கள் பார்க்க இயலும்.

இதையடுத்து உங்கள் கூகுள் கணக்கில் உள்நுழையாமல் இருக்கும் ஏதேனும் தெரியாத சாதனத்தை கண்டால், பட்டியலிலுள்ள அச்சாதனத்தை தேர்வு செய்ய வேண்டும். அவற்றில் “Sign Out” ஆப்ஷனை மீண்டும் தட்ட வேண்டும். வேறு ஏதேனும் தெரியாத சாதனத்தில் உங்களது கூகுள் கணக்கை கண்டால், முதலில் உங்கள் கணக்கிலிருந்து வெளியேற்றிய பின் பாஸ்வேர்டை மாற்றவேண்டும். கூடுதல் பாதுகாப்பை சேர்க்க விரும்பினால், 2-Step Verification அம்சத்தை இயக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை கடைபிடித்து நீங்கள் அம்சத்தை இயக்கலாம்.

ஏனென்றால் பாதுகாப்பு பிரிவில் விருப்பம் தெரியும். நீங்கள் இதனை அமைத்ததும் தாங்கள் பதிவுசெய்த கடவுச்சொல் (அ) 2-Step Verification இயக்கியுள்ள முதன்மை சாதனத்தை பயன்படுத்தி எந்த சாதனத்திலும் உங்கள் கூகுள் கணக்கில் உள்நுழைய இயலும். 2-Step Verification குறியீட்டை உள்ளிடவோ (அ) உங்கள் கூகுள் கணக்கில் உள் நுழையும் ஒவ்வொரு முறையும் Security Key-ஐ பயன்படுத்த விரும்பவில்லை எனில், கணினி (அ) மொபைல் சாதனத்தை நம்பகமானதாக குறிக்கலாம். நம்பகமான கணினிகள் மற்றும் சாதனங்கள் உடன் ஒவ்வொரு முறையும் உள்நுழையும் போதும் சரிபார்ப்பு குறியீட்டை உள்ளிட வேண்டியதில்லை.