உத்தரப் பிரதேச மாநிலத்தில் 8 மாதக் கர்ப்பிணியாக இருந்த மனைவி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், 5 வயதுச் சிறுவன் அளித்த சாட்சியத்தால் கணவனின் நாடகம் அம்பலமாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹனீஃப் என்பவருக்கும் அவரது மனைவி மனிஷாவுக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், 8 மாதக் கர்ப்பிணியாக இருந்த மனிஷாவை, ஹனீஃப் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, அது குறித்து எதுவும் தெரியாதது போல நாடகமாடியுள்ளார்.
ஆனால், இந்தச் சம்பவத்தின் போது அவர்களின் 5 வயதுச் சிறுவன் உடனிருந்து அனைத்தையும் பார்த்துள்ளான். காவல் துறையினர் நடத்திய விசாரணையின் போது, அந்த 5 வயதுச் சிறுவன் துணிச்சலாக முன்வந்து, “அப்பாதான் அம்மாவைக் கொன்றார்… அதை நான் நேரடியாகப் பார்த்தேன்” என்று அதிர்ச்சி அளிக்கும் வாக்குமூலத்தைக் கொடுத்துள்ளான்.
தன் சொந்த மகனே தனக்கு எதிராகச் சாட்சி கூறியதால் நிலைகுலைந்து போன ஹனீஃபிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதன்பின்னர், தன் மனைவியைக் கொன்றதை அவன் ஒப்புக்கொண்டான். 5 வயதுச் சிறுவனின் சாட்சியத்தால் மனைவியைக் கொன்று நாடகமாடிய கணவன் ஹனீஃப் ⁵⁵ செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
