உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பயனாளர்களுக்கு ஒரு புது வசதியை கொண்டுவந்துள்ளது வாட்ஸ்ஆப். அந்தவகையில்  Whatsapp இல் முக்கிய கருத்துக்கள், செய்திகள், புகைப்படம் அல்லது வீடியோக்களை பகிரும் படியாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த  அப்டேட் பயனர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது  மேலும் ஒரு புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, வாட்ஸ் அப்  மூலமாக பகிரும் செய்திகள், வீடியோக்கள், புகைப்படம் மற்றும் கருத்துக்களை வாட்ஸ் அப்  நண்பர்களுக்கு நேரடியாகவே ஷேர் செய்யும்படியான அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.