உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வாட்ஸ் அப்பில் அவதார் வசதியை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.

தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் தனது செயலில் உள்ள அவதார்சை யார் யார் பார்க்க வேண்டும் என்பதை தேர்வு செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. முதல் கட்டமாக இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் டெஸ்டிங் செய்யப்படும். இந்த புதிய வசதியை பெறுவதற்கு my contact, தேர்ந்தெடுக்கப்பட்ட selected contact அல்லது nobody என்ற மூன்று ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்து செட் செய்யலாம்.