சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல்வேறு காணொளிகள் பதிவேற்றப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு சிறுவன் பாம்புடன் விளையாடும் காட்சி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

 

பொதுவாக பாம்பு என்றாலே அனைவரும் அச்சப்படும் சூழலில் ஒரு சிறுவன் பாம்பின் வால் பகுதியை பயமே இல்லாமல் பிடித்து இழுத்து விளையாடுகிறார். ஒரு பாம்பாட்டியின் அருகில் அமர்ந்திருக்கும் அந்தச் சிறுவன் அது ஏதோ ஒரு விளையாட்டுப் பொம்மை என்பதைப் போல மிகச் சாதாரணமாகக் கையாளுவது காண்போரை உறைய வைத்துள்ளது.

எமனுடன் விளையாடும் சிறுவன் என்றும் ஆபத்தான விளையாட்டு என்றும் பலரும் இந்தக் காணொளி குறித்துத் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்தக் காட்சி தற்போது பலரது பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.