சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல்வேறு வினோதமான மற்றும் வேடிக்கையான செய்திகள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது பள்ளி மாணவர் ஒருவரின் தேர்வுத்தாள் தொடர்பான புகைப்படம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
ஒரு தேர்வில் நமது உணவின் முக்கிய ஆதாரங்கள் யாவை என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு அந்த மாணவர் சற்றும் யோசிக்காமல் பொது விருந்து, திருமணம், இறப்பு சடங்கு மற்றும் பிறந்தநாள் விழாக்கள் எனப் பதிலளித்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர் அந்த மாணவருக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்கியதுடன் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டாம் என வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார்.
நிஜ வாழ்க்கையின் எதார்த்தத்தை நகைச்சுவையுடன் வெளிப்படுத்திய இந்த மாணவரின் பதில் தற்போது பலரால் பகிரப்பட்டு வருகிறது.
