இந்தியா ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26-ஆம் தேதியை  குடியரசு தினமாக கொண்டாடுகிறது. குடியரசு தின கொண்டாட்டங்களின் முக்கிய ஈர்ப்பு ஆண்டு அணிவகுப்பாகும். இது டெல்லியில் உள்ள ராஜ்பாத்தில் தொடங்கி இந்தியா கேட்டில் முடிவடைகிறது. குடியரசு தினத்தின் போது நாட்டின் குடியரசு தலைவர் புது தில்லி ராஜ்பாத்தில் கொடியேற்றுகிறார். அதன் பின் இந்திய ராணுவம், இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படை போன்றவற்றின் இந்திய கலாச்சார மற்றும் சமூக பாரம்பரிய அணி வகுப்புகள் மற்றும் விமான காட்சிகளையும் இந்த விழா நிகழ்வு காட்டுகிறது.

1947 -ஆம் ஆண்டு இந்தியா பிரிட்டிஷ் ராஜ்ஜிடம் இருந்து சுதந்திரம் பெற்ற போது ஜனவரி 26, 1950 வரை இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது. சுதந்திரம் பெற்ற பின் இந்தியாவிற்கான அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவதற்காக மாமேதை அம்பேத்கர் தலைமையில் 1947 -ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழு அதே வருடம் நவம்பர் மாதம் நான்காம் நாள் விரைவு அறிக்கையை சமர்ப்பித்தது.

இந்த வரைவு அறிக்கை தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களை அறியும் விதமாக விவாதங்கள் நடத்தப்பட்டது. அதன் பின் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24-ஆம் நாள் நாடாளுமன்றத்தில் அந்த சட்ட வரைவு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனையடுத்து 1930 ஆம் ஆண்டு காந்தியடிகளால் அறிவிக்கப்பட்ட சுதந்திர நாளான ஜனவரி 26 -ஆம் நாள் முதல் அரசியலமைப்பு சட்டத்தை அமல்படுத்த பண்டித நேரு தலைமையிலான அரசு முடிவு செய்தது. இதனை தொடர்ந்து அந்த நாளை இந்திய குடியரசு நாளாக 1950 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.