சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழா தொடர்பாக முக்கியமான 5 வித்தியாசங்களை நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

# பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து வெளியே வந்த தினம் ஆகஸ்ட் 15 1947 சுதந்திர தினம் ஆகும். ஆனால் இந்தியன் கான்ஸ்ட்டிடியூசன் பிறந்த தினம்தான் குடியரசு தினம். இந்த இந்தியன் கான்ஸ்ட்டிடியூசன் 26 ஜன,.1950 முதல் நடைமுறைக்கு வந்ததால் ஒவ்வொரு ஜனவரி-26ம்  குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.

# கொடியை கீழிருந்து மேலே வரை ஏற்றி (Flag Hosting) பிறகு பறக்கவிடப்படும் பழக்கம் சுதந்திர தினம் ஆகும். ஆனால் குடியரசு தினம் அன்று கொடி மேலே இருக்கும் அதை (Flag Unfurling) மட்டும் செய்து பறக்க விடுவார்கள்.

# சுதந்திர நாளில் டெல்லியிலுள்ள செங்கோட்டையில் பிரதமர் கொடி ஏற்றி வைப்பார். குடியரசு தின விழாவில் ராஜ்பாத்தில் கோடி பறக்கவிடப்படும்.

# கடந்த 1947 -1950 இந்தியாவின் தலைமை பிரதமரிடம் மட்டும் இருந்தது. அதன்பின் குடியரசு இந்தியாவின் முதல் நபர், குடியரசு தலைவரான ஜனாதிபதி 26 ஜனவரி 1950 முதல் இந்தியா நாட்டின் தலைமை பொறுப்பின் முதல் நபர் ஆனார்.

# சுதந்திர தினத்தில் பிரதமர் கொடி ஏற்றுகிறார். குடியரசு தலைவர் மாலையில் ரேடியோ தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றுவார். குடியரசு தினத்தன்று அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்ததால் அரசியல் சட்டத்தின் தலைவர் மற்றும் பாதுகாவலர் என்ற முறையில் குடியரசு தலைவர் கொடியை பறக்க விடுவார்..