இந்தியாவில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய நாட்களில் பெரும்பாலானோர் தேசியக்கொடியை ஆடையில் குத்திக்கொண்டு தேசப்பற்றை வெளிக்காட்டுவார்கள். அதன் அர்த்தம் உணர்ந்து செய்தால் நமது தேசியக்கொடி மேலும் வலிமை ஆகும். நம் தேசியக்கொடி 1947 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதியே அங்கீகாரம் பெற்றுவிட்டது. சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.

பொதுவாக தேசியக்கொடி என்பது கதர் ஆடையில் மட்டும் தயாரிக்கப்பட வேண்டும். இதனை எப்படி பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இத்தனை காரணங்களோடு உருவாக்கப்பட்டுள்ள தேசியக்கொடியில் உள்ள மூவர்ண ரகசியங்களைப் பற்றி நாமும் தெரிந்து கொள்வோம். தேசியக்கொடி காவி, வெள்ளை மற்றும் பச்சை ஆகிய நிறங்களை சம அளவில் கொண்டது எதனால் என்று தெரிந்து கொள்ளலாம்.

காவி:

காவி நிறம் வலிமையின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது. அதாவது சுதந்திர இந்தியாவை உருவாக்குவதற்கு நாட்டு மக்களின் ஒற்றுமையால் வந்த தைரியம் மற்றும் போர் குணத்தை இது குறிக்கின்றது. பொதுவாக வலிமை என்பது அனைவரும் ஒன்றிணைந்த இருந்தால்தான் கிடைக்கும் என்பதை குறிக்கும் விதமாக காதில் நிறம் தேசிய கொடியின் இடம்பெற்றுள்ளது.

வெள்ளை:

இந்த நிறம் அமைதி, அறியாமை மற்றும் தூய்மை ஆகியவற்றை குறிக்கின்றது. தேசிய கொடியில் உள்ள வெள்ளை நிறம் என்பது மாநிலங்களுக்கு இடையே நாம் அமைதியை நிலைநாட்ட செய்வோம் என முன்னோர் செய்த சத்தியத்தை நினைவூட்டும் நிறமாக இடம்பெற்றுள்ளது. அதாவது நாட்டில் நீதி, நேர்மை மற்றும் நல்ல எண்ணங்கள் இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக இது உள்ளது.

பச்சை:

பச்சை நிறம் என்பது நாட்டில் நிலையான வளர்ச்சியை உருவாக்க வேண்டும் எனவும் யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் வளர்ச்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் போன்ற அர்த்தங்களை உணர்த்தும் விதமாக தேசிய கொடியில் உள்ளது. இந்த நிறங்களுக்கு இடையே 24 கோடுகளோடு இருக்கும் அசோக சக்கரம் வாழ்வின் சுழற்சியை குறிக்கின்றது. இந்த அசோக சக்கரம் கருநீல நிறத்தில் இருக்கும்.