இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்த நாளான 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த குடியரசு தினத்தில் டெல்லி செங்கோட்டையில் ஜனாதிபதி கொடி ஏற்றி முப்படைகளின் அணிவகுப்பை பார்வையிடுவார். ஒவ்வொரு வருடமும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் குடியரசு தின கொண்டாட்டங்கள் வழக்கமாக ஜனவரி 24ஆம் தேதி தொடங்கி விடுவோம்.

ஆனால் இந்த வருடம் முதல் புதிய மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதாவது குடியரசு தின விழா உடன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளையும் மத்திய அரசு தற்போது இணைத்துள்ளது. அதன்படி இனி ஜனவரி 24ஆம் தேதிக்கு பதில் ஜனவரி 23ஆம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியப் போராட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற, துணிச்சலான தலைவர்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸும் ஒருவர். ஒடிசாவின் கட்டாக் நகரில் கடந்த 1897-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி பிறந்தார். இவரின் பிறந்தநாளைத்தான் பாராக்கிரம திவாஸ் என்று மத்திய அரசு கொண்டாட உள்ளது. இதற்கு முன்னதாக நேதாஜி பிறந்தநாள் வலிமை தினமாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த நாளில் குடியரசு தினம் கொண்டாட்டங்கள் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.