பல வருடங்களாக அடிமைப்பட்டு கிடந்த நமது நாடு பல்வேறு தேச தலைவர்களின் மாபெரும் போராட்டத்தால் இந்திய நாட்டுக்கு சுதந்திர காற்றை சுவாசிக்க வழி வகுத்தது. இதையடுத்து  இந்தியா தனக்குரிய அரசியல் அமைப்பை உருவாக்கியது. இதனை நினைவுகூறும் அடிப்படையில் வருடந்தோறும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம்.

கடந்த 1950ம் ஆண்டிலிருந்து இது தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்து இந்தியா, குடியரசு நாடு என்ற அந்தஸ்தை பெற்று வருகிறது. இதில் நம் நாட்டின் அரசியல் அமைப்பு மிக முக்கிய பங்காற்றி வகிக்கிறது. இதற்கு பல பேர் காரணமாக இருந்தாலும் இந்திய அரசியல் அமைப்பு எனில் அனைவருக்கும் நினைவில் வருவது டாக்டர். அம்பேத்கர் அவர்கள் தான்.

இவர் தான் நம் இந்திய அரசியல் அமைப்பினுடைய தந்தை ஆவார். இவரின் விடாமுயற்சியால் தான் இந்திய அரசியல் அமைப்பு இயற்றப்பட்டது. இந்திய அரசியலமைப்பின் தந்தை டாக்டர் அம்பேத்கர், ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான பாகுபாடுகளுக்காக போராடிய லட்சியத் தலைவர் ஆவார். அதோடு இவர் ஒரு பத்திரிகையாளர், பொருளாதார நிபுணர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியாவார்