இந்தியாவின் 74 வது குடியரசு தினம் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் தான்இந்தியாவில் ஆட்சி நடத்திய பிரிட்டிஷ் காலனி அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட அரசியல் அமைப்பை ஏற்றுக் கொண்டது. அதாவது கடந்த 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவானது தனது சொந்த இந்திய அரசியலமைப்பின் மூலமாக ஒரு மிருகத்தனமான காலணித்துவ ஆட்சியில் இருந்து வெளிவந்தது. இருந்தாலும் 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தான் இந்திய அரசியலமைப்பு முதன்முதலில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அதனால் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 26 ஆம் தேதி அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இப்படி நம்முடைய குடியரசு தினத்திற்கு பின்னால் அரசியலமைப்பு சபை, அண்ணல் அம்பேத்கர், இந்திய பிரிவினை, காங்கிரஸ் கட்சி மற்றும் பூர்ணா ஸ்வராஜ் தீர்மானம் என பல காரணங்கள் உள்ளது. அரசியலமைப்பு சபை என்பது இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பு. இந்த அமைப்பு அதன் முதல் அமர்வை 1946 ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்பதாம் தேதி நிகழ்த்தியது.

இதில் ஒன்பது பெண்கள் உட்பட மொத்தம் 27 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த அரசியலமைப்பு சபையின் கடைசி அமர்வு 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி முடிவடைந்தது. அப்போது அரசியல் அமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இரண்டு மாதங்களுக்கு பிறகு தான் அதாவது ஜனவரி 26 ஆம் தேதி 1950 ஆம் ஆண்டு 284 உறுப்பினர்களின் கையொப்பத்தை தொடர்ந்து இந்த நடைமுறை வந்தது.

மேலும் 1930 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் இந்திய சுதந்திர பிரகடனத்தை அறிவித்த நாள் என்பதால் தான் ஜனவரி 26 ஆம் தேதி இந்திய குடியரசு தினமாக கொண்டாட முடிவெடுக்கப்பட்டது. காங்கிரசின் பூர்ணா ஸ்வராஜ்தீர்மானம் இந்த நாளில் அறிவிக்கப்பட்டதன் காரணமாக இந்த தேதியை குடியரசு தினமாக தேர்வு செய்யப்பட்டது. அப்போதிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.