“ஒரு சிறுத்தை  பறக்குமா?” – இந்த கேள்விக்கு பதிலாக, கென்யாவின் மசாய் மாறா தேசிய பூங்காவில் வாழும் புகழ்பெற்ற சிறுத்தை  ‘லுலுகா’ ஒன்று ஆறைக் கடக்க ஒரு நொடியில் நம்ப முடியாத அளவுக்கான அதிசய ஜம்ப் அடித்தது.

வேட்டையாடும் நோக்கத்தில், நதி அப்புறம் நின்றிருந்த ஒரு மான் மீது கணைபோல் பாய்ந்த அந்த சிறுத்தையின் இந்த அதிரடி காட்சி, இன்ஸ்டாகிராமில் வெகுவாக பரவியுள்ளதோடு, வன ஆர்வலர்களின் மனங்களை பரவசப்படுத்தியுள்ளது.

பசியால் வெளியே வந்த லுலுகா, ஒரு நதியை ஒரே பாய்ச்சலில் கடக்க வேண்டும் என்ற சமயம், தன்னம்பிக்கையுடன் எழுந்து பறந்தது போல பாய்ந்து சென்ற அந்த நொடி, ஒவ்வொரு பயணத்திலும் தவிர்க்க முடியாத  தருணம் என Wild Photographer அபிஷேக் சடடா பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை @abhi_wildlife_frames என்ற இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த அவர், Nikon Z9 180-600mm லென்ஸில் இதை பிடித்ததாகக் கூறியுள்ளார். “அந்த நொடி, சிறுத்தையை வெறும் விலங்காக அல்ல; காட்டின் கவிதையாக உணர்த்தியது,” என அவர் விளக்கியுள்ளார்.

குறுகிய நேரத்தில் 35,000 பார்வைகள் மற்றும் 2,000 லைக்குகளைத் தாண்டியுள்ள இந்த வீடியோவில், “அதிர்ஷ்டசாலி பாட்டோ! இப்படி பறக்குமா புலி?” எனக் கூறும் நெட்டிசன்களின் கமெண்டுகள் குவிந்து வருகின்றன.

“அழகு… ஆனால் அபார சக்தி!” எனக் கருதி, இந்த வீடியோ தற்போது “பறக்கும் தென்றல் சிறுத்தை” புதிய அடையாளமாக இணையத்தில் நிலைகொண்டுள்ளது.