சிங்கம் என்றாலே சக்தி, ஆட்சி, மரியாதை என்று பல விஷயங்கள் நமக்குள் விரைந்து வரும். ஆனால், சமீபத்தில் வைரலாகியுள்ள வீடியோ ஒன்றில், ‘காடின் ராஜா’ என போற்றப்படும் சிங்கம், ஒரு ஹிப்போவின் தாக்குதலால் பதறி ஓடும் காட்சி நெட்டிசன்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்த 13 வினாடிகள் கொண்ட வீடியோவில், இரண்டு சிங்கங்கள் ஒரு நீர்நிலையில் குளித்து தங்களது நேரத்தை ரசித்துக் கொண்டிருந்தபோது, களத்தில் திடீரெனக் குதித்த ஹிப்போ ஒன்று,  சிங்கத்தின் மீது பாய்ந்து, அதை நீரில் இருந்து விரட்டியது. ஹிப்போவின் பெரிய வாயும், கோபமும் கண்டு சிங்கம் பயந்துவிட்டது போலவே ஓடியது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. இதை @Predatorvids என்ற கணக்கு X (முன்னாள் ட்விட்டர்) இல் பகிர்ந்திருக்கிறது. “இது சிங்கங்களுக்கு குளிக்க சரியான நேரம் இல்ல போல…” என ஒருவர் கருத்து தெரிவித்திருக்க, “ஹிப்போவிடம் மாட்டிக்கொண்ட சிங்கம் நஞ்சு காட்டாமலே ஓடிவிட்டது!” என வேடிக்கையாக மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார்.

பொதுவாக யானையைத் தவிர வேறு எந்த விலங்குக்கும் சிங்கம் அஞ்சுவது அபூர்வம் தான். ஆனால் இந்த ஹிப்போ, காட்டின் ராஜாவுக்கே பதற்றம் தரும் வகையில் தாக்கியிருப்பது இந்த வீடியோவின் ஹைலைட்.