ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவைச் சேர்ந்த யாஷ் கல்ரா, ஆரோக்கியமான காலை உணவை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கில் ‘Goat Life’ என்ற ஸ்டார்ட்அப்பை தொடங்கினார்.
ஆனால் ஷார்க் டேங்க் மேடைக்கு வருவது அவருக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து முயற்சி செய்து, 4 முறை நிராகரிக்கப்பட்ட பின்னரே இந்த சீசனில் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
மற்றவர்கள் போல நின்று கொண்டு பேசாமல், ஒரு கட்டத்தில் தரையில் அமர்ந்து பிட்ச் செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். “டீல் கிடைக்கவில்லை என்றால் இங்கேயே உட்கார்ந்து விடுவேன்” என அவர் விளையாட்டாகச் சொன்னது வைரலானது.
ஷார்க் நமீதா தாபரிடம் ஜாலியாகப் பேசி, பிளர்ட்டிங் செய்து பிட்ச்சை கலகலப்பாக்கினார். இது சோஷியல் மீடியாவில் இவருக்கு ஏகப்பட்ட ரீச் கொடுத்தது.
“Hot People Eat Breakfast” என எழுதப்பட்ட ஜாக்கெட்டை அணிந்து வந்து, பிராண்ட் மீது ஒரு வித ஆர்வத்தை உண்டாக்கினார்.
யாஷ் முதலில் 1% பங்கிற்கு ரூ. 36 லட்சம் கேட்டார். ஆனால் அவரது தயாரிப்பின் ருசி மற்றும் மார்க்கெட்டிங் திறமையைப் பார்த்த ஷார்க்குகள் போட்டி போட்டுக்கொண்டு ஆஃபர் கொடுத்தனர்.
இறுதியில், அமன் குப்தா மற்றும் அனுபம் மிட்டல் இருவரும் இணைந்து ரூ. 2 கோடிக்கு 8% பங்குகளை (Valuation ₹25 Cr) பெற்று ஒப்பந்தம் செய்தனர்.
