சமூக வலைதளங்களில் இப்போது தினமும் சிரிக்க வைக்கும் வீடியோக்கள் வருகிறது. அதில், தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஒரு பெண் ஸ்கூட்டியுடன் போடும் “போராட்டமே” நெட்டிசன்களை சிரிப்பில் மூழ்கடிக்கிறது. வீடியோவில், வீட்டுக்குள் நிறுத்தியிருந்த ஸ்கூட்டியை ஒரு பெண் மெதுவாக எடுத்து வருகிறார். முதலில் வாசலிலிருந்த இரும்புக் கதவை திறக்கிறார், பிறகு ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ணி புறப்படுகிறார்.

ஆனால் கதவைத் தாண்டும் முன்பே, கதவு தானாகவே மெதுவாக மூட ஆரம்பிக்கிறது. அதையடுத்து, ஸ்கூட்டியில் இருந்தபடியே கதவைத் திரும்பத் திறக்க முயற்சி செய்கிறார். சமநிலை இழந்து, இறங்கிச் சென்று கதவை முழுவதுமாகத் திறக்கிறார்.  கதவைத் திறந்தவுடன், ஸ்கூட்டியை பின் செலுத்துகிறார். ஆனால், வெளியில் இருந்த சற்றுத் தாழ்வான தரையை கவனிக்காமல் விட்டுவிட்டார். ஸ்கூட்டி பின்னோக்கி சறுக்க ஆரம்பிக்க, பெண் கீழே விழுந்து போவதற்கான காட்சி நேரடியாக வீடியோவில் பதிவாகி சிரிப்பை கிளப்புகிறது.

 

இந்த வீடியோவை @rameshofficial0 என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பதிவிட்டுள்ளது. இதுவரை ஆயிரக்கணக்கான பேர் பார்த்து, கருத்து தெரிவித்துள்ளனர்.