முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை கடந்த மூன்று ஆண்டுகளாகக் கைது செய்யாதது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்ற கிளை காவல்துறையினருக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துக் கேள்வி எழுப்பியுள்ளது.
கரூரில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் அசோக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி அசோக்குமார் தாக்கல் செய்த மனு நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறை அதிகாரிகளைத் பணி செய்யவிடாமல் தடுத்த புகாரில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியை மூன்று ஆண்டுகள் கடந்தும் ஏன் இன்னும் கைது செய்யவில்லை என அதிருப்தி வெளியிட்ட நீதிமன்றம், இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது.
