மும்பை புறநகர் மின்சார ரயில்களில் நிலவும் கடும் கூட்ட நெரிசலைச் சமாளிக்க பெண் பயணி ஒருவர் கையாண்ட நூதனமான யோசனை குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மும்பையின் விரார் நோக்கிச் செல்லும் மின்சார ரயிலில் பயணம் செய்த அந்தப் பெண் தனது பையிலிருந்து மடிக்கக்கூடிய சிறிய ரக இருக்கை ஒன்றினை எடுத்துப் போட்டு அமர்ந்து கொண்டு மற்ற பயணிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
View this post on Instagram
ரயிலில் இருக்கைகள் கிடைக்காத நேரத்தில் இத்தகைய எளிய கருவிகளைப் பயன்படுத்தித் தங்களுக்குத் தேவையான வசதிகளை மக்கள் தாங்களாகவே உருவாக்கிக் கொள்வதை இணையவாசிகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். மும்பை மக்களின் இத்தகைய சமயோசித புத்தி மற்றும் போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இந்தக் காணொளி தற்போது இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
