உத்தரப்பிரதேசத்தின் லலித்பூரில் கணவன்–மனைவிக்கிடையேயான தகராறு நடுரோட்டில் பரபரப்பாக மாறிய சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஆகஸ்ட் 9ஆம் தேதி கோட்வாலி சதார் பகுதியின் எலைட் கிராசிங் அருகே நடந்த இந்த சம்பவத்தில், குடிபோதையில் இருந்த மனைவி, தனது கணவனின் தலைமுடியைப் பிடித்து மீண்டும் மீண்டும் அறைந்த காட்சிகள் சிசிடிவி மற்றும் மொபைல் கேமாராவில் பதிவாகியுள்ளன.
தகவலின்படி, கணவன்–மனைவி இடையே ஏதோ விஷயத்தில் தகராறு ஏற்பட்டது. கோபத்தின் உச்சத்தில் சென்ற கணவன், மனைவியின் மொபைல் போனைப் பிடுங்கி உடைத்துவிட்டார். இதனால் ஆவேசமடைந்த மனைவி, நடுரோட்டில் பேய் பிடித்தது போல் கணவனை தாக்கத் தொடங்கினார். 10 நிமிடங்களில் 15 முறை மீதமாக அறைந்த அவர், போலீசார் வந்தபின்பும் விடாமல் தலைமுடியை 12 முறை இழுத்ததாக கூறப்படுகிறது.
ललितपुर में पत्नी ने बीच सड़क पति पर बरसाए थप्पड़ @NavbharatTimes pic.twitter.com/nDFmZbRh2o
— NBT Uttar Pradesh (@UPNBT) August 10, 2025
போலீசார் பலமுறை அவரைத் தடுத்து விளக்க முயன்றும், மனைவி அவர்களது பேச்சைக் கேட்கவில்லை. இறுதியில் கடும் முயற்சிக்குப் பிறகே கணவன் மனைவியிடமிருந்து விடுவிக்கப்பட்டார். வைரல் வீடியோவில் அந்தப் பெண் குடிபோதையில் இருந்தது தெளிவாக தெரிகிறது.
மனைவி பின்னர் கூறுகையில், “நான் அந்த இளைஞனை காதலித்து திருமணம் செய்துகொண்டேன். நான் பொதுச் சாதியைச் சேர்ந்தவள், அவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். திருமணத்திற்குப் பிறகு குவாலியர், இந்தூரில் அவர் என்னை அடித்தார். மது குடிக்க வைத்ததும் அவர்தான்” என குற்றம்சாட்டினார்.
கோட்வாலி சதார் காவல் நிலையப் பொறுப்பாளர் அனுராக் அவஸ்தி தெரிவித்ததாவது: “இந்த சம்பவம் குறித்து இதுவரை எவரும் புகார் அளிக்கவில்லை. சம்பவம் தொடர்பான தகவல்களை சேகரித்து வருகிறோம். புகார் வந்தவுடன் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
