தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இது தொடர்பாகச் சென்னையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தமிழ்நாட்டில் உள்ள உள்ளூர் திருவிழாக்களைக் கணக்கில் கொண்டே தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால் தேர்தல் தேதிகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.