நீட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பேசிய பத்திரிக்கையாளர் செந்தில், இப்போ உதயநிதி ஸ்டாலின் தான் எல்லாத்துக்கும் பொறுப்பு. எதுக்கு ? நீட் வந்ததுக்கு அவர் தான் பொறுப்பு. அவர் அப்போ எம்எல்ஏ கூட கிடையாது.  அவர் ஒரு வாக்குறுதி கொடுத்து விட்டார். அவர்தான் பொறுப்பு. இது மனநோய். நான் இந்த வார்த்தையை தெரிந்தே பயன்படுத்துகிறேன்.

உதயநிதி ஸ்டாலினை மற்றும் குற்றவாளி கூண்டில் ஏத்திவிட்டு,  தப்பிக்கொள்ள நினைக்கும் அஇஅதிமுகவினுடைய மனநோய் என்று இதை நான் குறிப்பிடுகிறேன். ஏன் ? ஆமாம்…  தேர்தல்ல திமுக வெற்றி பெற்றது. முறையாக ஒரு குழு அமைத்தது, சட்டமன்றத்தில் ஒரு  சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றியது, ஆளுநருக்கு அனுப்பியது, நீதிமன்றத்தில் வழக்காடியது.

இத்தனைக்கு பிறகும்…  நீட்டில் இருந்து விலக்கு தர மறுப்பது யார் என்றால் ? பாஜக. அந்த பாஜகவோடு கூட்டணியில் இருப்பது யார் என்று பார்த்தால் ? அஇஅதிமுக. இனமான உணர்வுள்ள அஇஅதிமுக என்ன செய்ய வேண்டும் என்றால் ?  தன்னுடைய பாஜகவை நோக்கி… தன்னுடைய கூட்டணி கட்சியை நோக்கி….  அவர்கள் சட்டையை பிடித்து,

தமிழ்நாட்டில் நீட்டுக்கு விலக்கு தந்தால் மட்டும்தான் உன் கூட கூட்டணி,  இல்லன்னா….  உன்னோட கூட்டணி இல்லைன்னு சொல்றதுக்கு துணிச்சல் இல்லாத…  இந்த வார்த்தை தவிர எனக்கு பொருத்தமான வார்த்தை கிடைக்கல. எனக்கு இந்த வார்த்தையில் உடன்பாடு இல்லை. இருந்தாலும் இந்த வார்த்தை பயன்படுத்துகிறேன் என கூறி பேசினார்.