திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், இப்போது பலர் கேட்கிறார்கள். என்ன ? உங்கள் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி போராட்டம் பண்றாரே… நீட் விலக்கு நடக்குமா ? என கேட்கின்றார்கள். நான் சொல்கிறேன். இங்கே  வள்ளுவர் கோட்டத்தில் இருந்து இந்தப் போராட்டம் நடக்கிறது.  ஏற்கனவே தளபதி அவர்கள் முதல்வராக இருந்து  ”நீட் விலக்கு”  மசோதாவை அனுப்பி இருக்கிறார்கள், இதுவும் வெல்லும், கண்டிப்பாக வெல்லும்.

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அல்ல, இந்திய மாணவர்களுக்கும் நீட்டிலிருந்து விலக்கு கிடைக்கும்  என்ற வகையிலே… இந்த போராட்டம் வெற்றி பெறும். அது மட்டுமல்ல, ஒன்பது மாதங்களிலே இந்தியாவின் பிரதமரை நிர்ணயிக்கக் கூடிய தலைவராக நாம் தலைவர் தளபதி அவர்கள் வர இருக்கிறார். ஏன் அடுத்த பிரதமராக வரக்கூடிய தகுதி படைத்தவர் யார் என்றால் ? நம்  தலைவர் தளபதி தான். விட்டுடுவோமா, எதை எடுத்தாலும் வெற்றி காணுகின்ற தலைவர் நம் தளபதி.

கலைஞருக்கு எப்படி உணர்வு இருந்ததோ அந்த உணர்வு நம் தலைவர் தளபதிக்கு இருக்கிறது. நம் இளைஞர் அணி செயலாளர், அமைச்சர் சொல்லும்போது…. நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.  ”நீட் தேர்வு ரத்து”ஆமாம் சொன்னோம், செய்கிறோம். செய்தே காட்டுவோம் என்ற உறுதியினை எடுத்துள்ளார். கண்டிப்பாக இது வெற்றி பெறுகின்ற போராட்டம் தான். இந்த போராட்டம் தொடரும். நம் எதிர்பார்ப்பு கண்டிப்பாக….. இந்த கூடர்கள், மூடர்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும் என தெரிவித்தார்.