திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர்  நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாம் ஒரு பக்கம் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு தெரியும். ஆளுநர் திரு ஆர்.என் ரவி அவர்கள்,  எவ்வளவு திமிரு ? எவ்வளவு கொழுப்பு ? ஒரு கூட்டம் நடத்துறாரு. சரி,  நடத்தட்டும்.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை எல்லாம் அழைச்சு ஒரு கூட்டம். கிட்டத்தட்ட ஒரு கோச்சிங் கிளாஸ் மாதிரி…  நீட்டுக்கு கோச்சிங் கிளாஸ் நடத்துகிறார் ஆளுநர். அதுல வெற்றி பெற்ற ஒரு மாணவரோட தந்தை திரு. அம்மாசியப்பன் எழுந்து குரல் கொடுக்கிறார். சார்… எங்ககிட்ட பணம் இருக்கு. நான் நீட் தேர்வில் தோல்வியடைஞ்சிட்டு புகார் கொடுக்கல. என்னுடைய மகன் வெற்றி பெற்றுவிட்டார். நீட்  கோச்சிங் அனுப்பிச்சேன்.என்கிட்ட பணம் இருந்துச்சு, வசதி இருந்தது, நான் கோச்சிங் அனுப்பிச்சிட்டேன். ஆனால் நீங்க நீட் தேர்வை ரத்து செய்யுங்க.

என்னை மாதிரி எத்தனை பேர் அனுப்ப முடியும்னு அப்படின்னு ஒருத்தர் தைரியமா எந்திரிச்சு ஆளுநரை கேட்கிறாரு. இவரு திமிரு தனமா…  ஐ வில் நெவர் நெவர் எவர் ( I will never never ever). நான் கேட்கிறேன் திரு. ஆளுநர் அவர்களே…  ஹூ ஆர் யூ ? வாட் அத்தாரிட்டி டு யூ ஹேவ் ? (Who are you? What authority you have?). நான் கேட்கிறேன்… திரு.ஆளுநர் அவர்களே…  Who are you ? Are you people’s representative ? You are just a postman. நாங்க சொல்றத… எங்க முதலமைச்சர் சொல்றத…  கவர்னர் போய் ஒன்றிய அரசிட்ட கொடுக்கிறது மட்டும்தான் உங்க வேலை. நீங்க ஒரு தபால்காரர். மரியாதையை கொடுத்தா போய்கிட்டே இருக்கீங்க என தெரிவித்தார்.