இந்திய மக்கள் அனைவருக்கும் ஆதார் மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. அனைத்து சேவைகளுக்குமே தற்பொழுது ஆதார் கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி வங்கிக்கணக்கு தொடங்கவும், ரேஷன் கடையில் பொருள் வாங்கவும், குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவும் ஆதார் கட்டாயமாக இருக்கிறது. இந்த நிலையில் புதுச்சேரி அரசு 2 முக்கியமான சேவைகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்கியுள்ளது.

அதன்படி பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளின் போது ஆதார் எண் கட்டாயம் தேவை என்று தெரிவித்துள்ளது. மேலும் பிறப்பு பதிவிற்கு பெற்றோர்கள் ஆதார் இணைக்கப்பட வேண்டும். இறப்பு பதிவிற்கு இறந்த நபரின் ஆதார் எண்  சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் ஆதார்  விவரங்களை அளித்து பிறப்பு இறப்பு பதிவு நடைமுறைகளை தங்கு தடையின்று பெற ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.