அமெரிக்காவில் உள்ள மேரிலாந்தை சேர்ந்த பிரென் என்ற பெண்ணுக்கு அதிர்ஷ்டம் கூரையைபிய்த்துக் கொண்டு கொட்டியுள்ளது. ப்ரென்னுக்கு லாட்டரியில் $50,000 ( இந்திய மதிப்பில் ரூ.42 லட்சம்) பரிசு விழுந்துள்ளது. சமீபத்தில் தன்னுடைய காதலனை 10 டாலருக்கு இந்த லாட்டரி டிக்கெட்டை வாங்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் அவர் லாட்டரி வாங்கி அந்த பெண்ணுக்கு வழங்கினார். அந்த டிக்கெட்டிலேயே பிரென்னுக்கு இந்த பரிசு விழுந்துள்ளதால் காதலர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போய்உள்ளனர்.