பாமாக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, இதே அன்னூர் பகுதியில் உள்ள விவசாயிகள், அதை எதிர்த்து போராடினார்கள். அங்கே இருக்கின்ற விவசாய நிலம், 1700 ஏக்கர் பட்டா நிலத்தை, நாங்கள் கொடுக்க மாட்டோம், என்று அங்கு இருக்கின்ற விவசாயிகள் போராடினார்கள். அதிலும், முதல் முதலில், அங்கே அதை எதிர்த்து குரல் கொடுத்தவன், பாட்டாளி மக்கள் கட்சி.

அந்தப் பகுதியில, அண்ணா.தி.மு.க. பொதுச்செயலாளர்…  இன்றைய பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், எடப்பாடி பழனிசாமி, அங்கே சென்று போராடினார். பி.ஜே.பி தலைவர் அண்ணாமலை, அங்கே சென்று போராடினார். அதன் பிறகு, தமிழக அரசு அந்தத் திட்டத்தை கைவிட்டார்கள். அன்னூரில், இதே போன்று, 1700 ஏக்கர் விவசாய விளைநிலங்கள், பட்டா நிலத்தை நாங்கள் எடுக்க மாட்டோம், என்று தமிழக அரசு முடிவு எடுத்து,

அந்த திட்டத்தை கைவிட்டார்கள். அப்போ, அன்னூருக்கு ஒரு நியாயம். செய்யாறுக்கு ஒரு நியாயமா. அப்போ, நாம எல்லாம் பாவப்பட்ட மக்களா இங்க….. நாம என்ன பாவம் செய்தோம். நாங்க கேக்குறது, எங்க நிலத்த விடுங்க. நாங்க, எங்க பாட்டன், பூட்டன், இந்த நிலத்துல இருந்தாங்க. நிலத்துல உழுது  எங்களுக்கு விவசாயம் பண்ணது, எங்க வருங்கால சந்ததியினரும் இந்த நிலத்துல இருக்க வேண்டும். இந்த நிலம் விட்டா, எங்களுக்கு வேற நாதி கிடையாது. எங்களுக்கு வேற தொழில் தெரியாது. இதெல்லாம், கடந்த காலத்துல எவ்வளவு பார்த்துவிட்டோம் என தெரிவித்தார்.