மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீங்கள் பொருட்களை தயாரிக்கின்ற பொழுது…  அதை சந்தைப்படுத்துவதற்கம் நம்முடைய அரசு துணை நிற்கின்றது….  கிராமப் பகுதிகள் நீங்கள் தயாரிக்கும் பொருட்களை நகரத்தில் வந்து விற்பனை  செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான்,

சமீபத்தில் பூமாலை வணிக வளாகங்கள் எல்லாம் புனரமைக்கப்பட்டு,  சீரமைக்கப்பட்டு அவை  உங்களுடைய பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டன….  அதையெல்லாம் நீங்கள் பயன்படுத்துமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்… உற்பத்தியாளர், சந்தையாளர் கூட்டத்தை திருச்சியில் சில மாதங்களுக்கு முன்பு நடத்தி முடித்தோம். அந்த கூட்டம் உங்களுடைய பொருட்களை சந்தைப்படுத்த பெரிதும் உதவி புரியும் என்று நம்புகின்றோம்.

இணையத்தின் வாயிலாகவும் உங்கள் பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மதி சந்தை எனும் இணையதளம்…. அது போல் மதி மொபைல் அப்ளிகேஷன் போன்றவற்றையும் நாங்கள் தொடங்கி வைத்துள்ளோம். எனவே இந்த அரசு, உங்களின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும் துணை நிற்கும்….  மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த நீங்கள் ஒவ்வொருவரும் வாழ்வில் முன்னேற்றம் அடைய உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர இந்த அரசு தயாராக இருக்கிறது.

நான் அடிக்கடி சொல்வது போல நம்முடைய முதலமைச்சர் அவர்களும்,  இந்த அரசும் உங்களுக்கான இந்த கடன் உதவியை வெறும்  கடனாக…. கடன் தொகையாக பார்ப்பதில்லை….  அதற்கு மாறாக உங்களுடைய உழைப்பின் மீது வைத்துள்ள நம்பிக்கை தொகையாக தான் இந்த அரசு இந்த கடன் உதவியை பார்க்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே இங்கு கடன் உதவி பெற்றுள்ள உங்கள் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து,  வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன் என பேசி முடித்தார்.