செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  இந்த நாட்டு அடிமைப்பட்டு கிடக்கும்போது…  இந்த நாட்டு விடுதலைக்கு போராடாதவன் எல்லாம் இன்னைக்கு பிஜேபி, ஆர்எஸ்எஸ்ல இருக்கான்.  பாராளுமன்றத்தில்,  சட்டமன்றத்தில் இருக்கான்.  உயர்ந்த பதவியில் இருக்கான். இருக்கானா ? இல்லையா ?  ஆர்எஸ்எஸ் இந்த நாட்டின் விடுதலைக்கு….  பிஜேபியில் இன்றைக்கு இருக்கின்ற லீடர்கள்,

தலைவர்கள்….  இந்த நாட்டின் விடுதலைக்கு போராடிய ஒரே ஒரு போராட்டம். நான் ரொம்ப கேட்கல… என் பாட்டன் செக்கிழுத்து இருக்கான்..  சிறைப்பட்டு இருக்கோம்… நாங்கள் தூக்குல தொங்கி இருக்கோம்…  என்கிட்ட தேசப்பற்று கற்பிக்க வந்திருக்கான்,  எனக்கு வெறுப்பு வருமா?  வராதா ? இங்க வா…. நீ வா என்ன பண்ணுன  நீ சொல்லு…  வெள்ளைக்கார ராணிக்கு அரை டவுசரை போட்டு அணிவகுப்பு நடத்தி மரியாதை குடுத்தியா ?  இல்லையா ?

கோல்வால்கர்  பேசினது இருக்கா ? இல்லையா ? உங்க  திறன் எல்லாம் சேர்த்து வையுங்க…  வெள்ளைக்காரனை எதிர்த்து போராடுவதை நிறுத்துங்க…  விடுதலை பெற்ற பிறகு,  கிறிஸ்தவர்களை –  இஸ்லாமியர்களை எதிர்த்து போராடுவதற்கு நமக்கு வலிமை வேணும்னு பேசுனது இருக்கா ? இல்லையா ? எழுதினது இருக்கா ? இல்லையா ? இந்த நாடு அடிமைப்பட்டு கிடக்கும் போது போராடியது…  காந்திக்கு எந்த வகையில் முகமது அலி ஜின்னா குறைவா போராடிட்டாரு,  சொல்லுங்க….

இந்த நாடு அடிமைப்பட்டு கிடக்கும்போது நாட்டின் விடுதலைக்கு போராடியவன் தான் பாகிஸ்தான்,  பங்களாதேஷ்ல இருக்கான்.  நீ பெத்து போட்ட குழந்தை தான் பாகிஸ்தான்.  நீ பிரசவம் பார்த்த பேரன் தான் பங்களாதேஷ். நீ இரண்டு நாட்டையும் பகை நாடாக மாற்றி வச்சிருக்க… எப்படி இது ? கொடுமையா இருக்கு இது. இவங்க சொல்றதெல்லாம் நம்ம கேட்டறனும் அப்படியே…

பாகிஸ்தான் பக்கத்தில் இல்ல பங்களாதேஷ் பக்கத்துலஇருக்குன்னா…  உனக்கு பாலிடிக்ஸ் இருக்கா? பசுமாடு பாகிஸ்தான் பக்கத்து நாடு…  ஜெய் ஸ்ரீ ராம் கோசம்…  இத தவிர வேற என்ன உனக்கு பாலிடிக்ஸ் ஏதாவது சொல்லுங்க ? பிஜேபிக்கு ஏதாவது இருக்கா  ? ஒன்னும் கிடையாது என தெரிவித்தார்.