தமிழகத்தில் அனைத்து வகையான வாகனங்கள் இயக்குவதற்கும் ஓட்டுநர் உரிமம் கட்டாயம். பொதுவாக பயிற்சி நிறுவனங்களில் வாகனங்களை பொறுத்து 2000 ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரையிலும் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் சிரமம் இல்லாமல் போக்குவரத்து துறை தொடர்பான சேவைகளை பெரும் வகையில் மிகக் குறைந்த கட்டணத்தில் ஓட்டுநர் உரிமம் பெரும் விதமாக உள் போக்குவரத்து துறை சார்பாக முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் மொத்தமாக 91 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், 54 மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள் என மொத்த 145 அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில் ஓட்டுநர் பயிற்சி பெறுவதற்காக தமிழக அரசு 6கோடியே  25 லட்சம் மதிப்புள்ள 145 இலகு ரக மோட்டார் வாகனங்களை வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஓட்டுனர் உரிமம் பெரும் செலவு குறையும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.