ADMK கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம்  Ops தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய மாவட்ட கழக செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, நாங்க ஒரிஜினல் அண்ணா திமுக. நாங்க வேஷ்டி கட்ட கூடாதுன்னு சொல்றதுக்கு நீ யார்யா ? உங்களுக்கு எத்தனை தீர்ப்புனாலும்  வரட்டும். ஆனால் மக்கள் தீர்ப்பு எங்க ஐயா பக்கம்.  அந்த சாமி…. அந்த சாமி…. அந்த கடவுள் எங்கள் பக்கம்.  வாங்க போட்டு பார்த்திரலாம். 

ஒருத்தனாவது அண்ணா திமுகவில் இருந்தா  பொட்டியை வைங்கடா எல்லா இடத்திலும்…. பொட்டியை வைங்க…  நீங்க ஜெயிச்சிட்டா நாங்க அரசியலை விட்டுட்டு போயிருந்தோம்….  நாங்க ஜெயிச்சா நீங்க அரசியலை விட்டுட்டு சேலத்துக்கு கிளம்பிடு. உங்களுக்கு ஏன் மூஞ்சி உம்முன்னு இருக்கீங்க இப்போ….  உங்களுக்கு ரெட்டை இலை உங்கள் பக்கம் ஃபெவரா இருக்கு…. கட்சி உங்க கையில இருக்கு…. ஏன்டா  மூஞ்சின்னு உம்முன்னு வச்சிருக்கீங்க…. நாங்க ஒண்ணுமே இல்ல,  எவ்ளோ சந்தோஷமா இருக்கோம் பாத்தீங்களா….

எவ்ளோ சந்தோஷமா இருக்கோம்.  ஓபிஎஸ்னா ஒத்த ஆளு,  அவரை தூக்கி தூர போட்டுவிடலாம் என்று பார்த்தீர்களா… டேய் நாங்க  பஞ்சபாண்டவர்கள் சரியா ? நீங்க துரியோதன கூட்டம்…. பஞ்சபாண்டவர்கள் நாங்க ஜெயிச்சு தான் பழக்கம்…  துரியோதன கூட்டம் முடிஞ்சிடும். நாடாளுமன்றத்தோடு எடப்பாடி அதிகாரம் எல்லாம்  வாஷ் அவுட்  புரியுதா ?

கொங்கு மண்டல கட்சி….  நீ  என்ன கவுண்டன் கட்சியாக ஆக்க  பார்க்கிறாயா? இந்த கட்சி உங்க அப்பன் வீட்டு கட்சியா ?  ஏய் நாங்க ஜாதி பார்க்காம….  87 மாவட்ட செயலாளர் போட்டு இருக்காரு. நீங்க  மோடியை பார்க்க போனீங்க இல்ல….  யாரை கூட்டிட்டு போனீங்க ? ஏன் உங்க கவுண்டர் சமுதாயம் மட்டும் கூட்டு போனீங்க மோடிகிட்ட ?  மத்த சமுதாயத்தை ஏன் கூட்டிட்டு போகல ? இங்க அப்படி கிடையாது என தெரிவித்தார்.