தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் பட்ஜெட்டில் புதிதாக எதுவுமே இல்லை என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) போஜராஜன் காட்டமாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ‘மாடல்’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. தற்போது அமைந்துள்ள தவெக ஆட்சியில் ‘வெற்றி’ என்ற ஸ்டிக்கரை ஒட்டி அதே திட்டங்களை மீண்டும் சமர்ப்பித்துள்ளனர்” என்று கிண்டலாகக் விமர்சித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், “இந்த பட்ஜெட்டில் புதிதாக எந்தவொரு திட்டமும் சேர்க்கப்படவில்லை என்றாலும், மத்திய அரசின் ஆதரவோடு செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவதாக அறிவித்திருப்பது மட்டும் பாராட்டுக்குரிய ஒன்று” என்று தெரிவித்தார்.
தவெக அரசின் வேளாண் பட்ஜெட்டில் புதிதாகத் தொலைநோக்குத் திட்டங்கள் எதுவும் இல்லை என்றும், முந்தைய திட்டங்களுக்கே புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றும் பாஜக எம்.எல்.ஏ போஜராஜன் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
