செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம், இஸ்லாமியர்களை பகடைக்காயாக பயன்படுத்தி கடந்த காலங்களில் இஸ்லாமியர்கள்…. கல்வியில்… பொருளாதாரத்தில்…  பின்தங்கியதோடு தீவிரவாதிகள்,  பயங்கரவாதிகள் என்ற முத்திரையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய அரசியல் வெறிக்காக…  திமுக உடைய இந்த திராவிட கேடுகெட்ட அரசியல் வெறிக்காக…  ஒரு தேசிய சித்தாந்தத்தில்…. இந்த தேசத்திற்காக போராடி….

எத்தனையோ உயிர்களை கொடுத்த இஸ்லாமியர்கள்,  இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சி போன்ற ஒரு தேசிய கட்சியை….. 17 மாநிலங்களில் ஆளுகின்ற கட்சியை….. மத்தியில் ஆளுகிற ஒரு கட்சிக்கு எதிராக ஒரு கொடியை ஏற்றக்கூடாது,  அதுவும் மாநில தலைவர் வீட்டுக்கு முன்னால் ஏற்றுக் கூடாது என்று சொல்லி ஒரு 10 பேர் போராடுறான்னா….   நியாயம் கேட்டு பாரதிய ஜனதா கட்சியினுடைய நிர்வாகிகள் இஸ்லாமியர்கள் அங்கு களத்தில் நிற்கிறாங்க.

எங்களுடைய மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் இல்லத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் இஸ்லாமியர்கள் அத்தனை பேருமே பாரதிய ஜனதா கட்சியோடு இருக்கிறோம் என்பதை நடைமுறையில் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அண்ணாமலை அவர்கள் வீட்டில் இருக்கிறார்கள். அப்ப நாங்களும் இதே மாதிரி சேர்க்கட்டுமா ?

இஸ்லாமியர்களை ஒருங்கிணைத்து…. ஐயாயிரம் பேரை ஒருங்கிணைத்து…  இருக்கின்ற கொடி தமுமுக,  எஸ்டிபிஐ,  எல்லா கொடியை பிச்சி நாங்க எரியட்டுமா ? இந்த மாதிரி தான் காவல்துறை விரும்புகிறதா ? இது முழுக்க முழுக்க காவல்துறையினர் செய்யக்கூடிய இந்த செயல் என்பது,  ஒரு சார்பாக இருக்கிறது. இதுபோன்ற வெறி செயல் தொடருமேயானால் நிச்சயமாக ஜனநாயக ரீதியாக மிகக் கடுமையான போராட்டத்தை பாரதிய ஜனதா கட்சி எடுக்கும் என தெரிவித்தார்.