செய்தியாளர்களிடம் பேசிய மறைந்த முன்னாள் தமிழக முதலவர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா,  அம்மா எதுவும் சொல்ல மாட்டாங்க. சொன்னால்  கரெக்டா செய்வாங்க. இதற்கு நிதிநிலை முடியுமா ? என்னங்கறத பார்ப்பாங்க….  ஒரு சீப் மினிஸ்டர் அப்படின்னு சொல்லிட்டு,  நீங்க  10,  20 வண்டியில போயிட்டு….  சிஎம் என்று போய்கிட்டு இருந்தா ஆட்சி எல்லாம் நடத்த முடியாது. ஏனென்றால் நான் கூடவே இருந்து பார்த்து இருக்கேன்.

அந்த மாதிரி எல்லாம் செஞ்சோம்னா ஆட்சி நடத்த முடியாது,  மக்களுக்கு எதுவும் பண்ண முடியாது. நாம யோசிக்கணும் நிறைய…. அதுக்கு நேரம் பத்தாது. அதனால ஏதோ வாய்க்கு வந்தபடி மைக்கு கிடைச்சிருச்சுன்னு,  சொல்லிட்டு…  பேசிட்டு போறது எல்லாம் நல்லதா எனக்கு படல. அதனாலதான் அவுங்களை நான் நிறைய இடத்துல திட்ட கூட மாட்டேன். என் பாணியிலே  சொல்லுவேன். இது இது தப்பா நடக்குது….

இதை பாருங்க அப்படின்னு… இன்னைக்கு கூட சொல்ல வேண்டியது நிறைய இருக்கு. ஏன்னா நான் ஒரு ஆளு தான் துணிஞ்சு பேசிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன்.  அதை எல்லாருமே சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.  நீங்க கரெக்டா சொல்றீங்க அப்டிங்குறாங்க…  அதனால இப்ப பாத்தீங்கன்னா…..  ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டை  நாங்க அதை  பண்ணுவோம்…..  இதை  பண்ணுவோம்னு சொன்னீங்க….  அம்மா காலத்துல அண்ணா திமுகவில் தான் இந்த ஜல்லிக்கட்டை  கொண்டுவர முடிஞ்சது.

ஜல்லிக்கட்டுல யாரும்  அரசியல் தலையிடு இருக்காது. ஆனால் இப்ப பார்த்தீங்கன்னா….  அந்த ஊரு மந்திரியே,  அமைச்சரே அங்கு நின்னுகிட்டு…. அங்கு ஒரு குழு போட்டு இருப்பாங்க. அந்த ஊர் மக்கள் எல்லாம் சேர்ந்து குழு அமைச்சி இருப்பாங்க. அவங்கதான் டோக்கன் எல்லாம் கொடுக்கிறது. மாடு கொண்டு வருவதற்கு நம்பர் போட்டு டோக்கன் கொடுப்பாங்க என தெரிவித்தார்.