துக்ளக் ஆண்டு விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி கேள்வி மற்றும் பதில்கள் வழங்கினார்.அதில் பேசிய அவர், கள்ளு,  சாராயம் விஷயம் இருக்கிறதே அது மனிதனுடைய குணத்தை சம்பந்தப்பட்டது.  இதற்கு எதிராக காந்தி பெரிய போராட்டமே நடத்தினார்.   அதை எல்லாம் இப்ப பண்ணுவதற்கு ஆளில்லை. இன்றைக்கு நாம் போலீசை நம்பி தான் இதை பண்ணுகிறோம். மதுவிலக்கை கொண்டு வரும்போது போலீசும் கள்ளச்சாராயம் சேர்ந்து கொள்கிறார்கள்.

அதனால் இது ஒரு பிரம்மாண்டமான பிரச்சனை. வெறும் அரசியல் நோக்கத்தோடு மட்டும் பார்க்க முடியாது. எல்லா எதிர்க்கட்சியும்  சாராயத்தை ஒதுக்கி விட வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் ஆளும் கட்சியான உடனே….. திமுக என்ன பண்ணுகிறது ? கனிமொழி தான் சொன்னார்கள்…  ஒரே ஒரு பொய் தான் சொன்னாங்க… மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று சொல்லி,  ஆயிரம் பொய்யை சொல்லி ஒரு கல்யாணத்தை பண்ணினேன் என்று சொல்வார்கள்….

நாங்கள் ஒரே ஒரு பொய்யை சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தோம் என்று கேட்கிறார்கள் இந்த அம்மா…. எல்லோரும் எதிர்க்கட்சியில் இருக்கும் பொழுது கூறுவது எல்லாம் ஆளும் கட்சியாக இருக்கும் பொழுது அவர்களால் செய்ய முடியவில்லை. அதிலும் மதுவிலக்கு ஒரு முக்கியமான விஷயம். இதற்கு பெரிய நம் ஆன்மீகவாதிகள்,  சமுதாய தலைவர்கள் இதற்கு நேரம் கொடுக்க வேண்டும். எல்லாரும் டிவி எதிரில் உட்கார்ந்து கொள்வது…

என்னத்தையாவது பொழுது போக்குவது அது மாதிரி இல்லாத சமுதாயத்திற்கு வேலை செய்ய நிறைய பேர் தயாராக வேண்டும். ஒரு காலத்தில் இருந்தார்கள்….. நானே  பார்த்திருக்கிறேன்… நான்  இளைஞராக இருக்கும் பொழுது எத்தனையோ பேரு சமுதாயத்திற்காக வேலை செய்ய வந்திருக்கிறார்கள்….  இப்பொழுது எல்லாம் யாருமே அந்த மாதிரி வருவதில்லை…  காரணம் என்னவென்றால்,

அரசியல் அந்த அளவிற்கு நம் மனதை தாக்கிக் கொண்டிருப்பதால்,  புதுவாழ்வு என்றால் அரசியல் என்றாகிவிட்டது. அதனால் தான் இந்த பிரச்சனைக்கு எல்லாம் தீர்வு காண முடியல. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றால், இது  ஆன்மீக நலன்….. குடும்ப நலன்…. பெண்கள் நலன்… இதில் ஈடுபாடு உள்ளவர்கள் எல்லாம் சேர்ந்தால் தான் இந்த காரியமே முடியுமே தவிர,  ஒரு கட்சியால் இது முடியும் என்று எனக்கு தோன்றவில்லை என தெரிவித்தார்.